தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார். இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் உட்பட பல்வேறு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

இவற்றில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும். அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது.  இந்த மருந்தகங்களில் 782 வகையான மருந்து வகைகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சியின் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.