
சீனாவில் 33 வயது பெண்மணி ஒருவர் முக சமச்சீரற்ற பிரச்சனைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக ஆலோசனை பெற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்தார். அந்த இளம் பெண் பல ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்திருந்த நிலையில் அவரது இடது கண்ணிமைக்கு பின்னால் கான்டாக்ட் லென்ஸ்கள் இடம்பெயர்ந்தது அந்தப் பெண்ணுக்கு முழுமையாக தெரியவில்லை.
கண்ணிமைக்குப் பின்னால் மறைந்திருந்த லென்ஸ்கள் அந்தப் பெண்ணின் கண்ணில் எந்தவித பாதிப்போ, எரிச்சலோ ஏற்படுத்துவதை அவர் உணரவில்லை. பலமுறை இவரது இடது கண் லென்ஸ் தொலைந்துள்ளதாக நினைத்துள்ளார். இதனை அடுத்து மருத்துவர்கள் இது குறித்து ஆய்வு செய்து கண் இமைக்குள் அதிக இடைவெளி இருப்பதால் லென்ஸ்கள் சிக்கி உள்ளன எனக் கூறினர். குறிப்பாக இந்த பெண்மணி மென்மையான மற்றும் நீர் சேர்க்கை தன்மை உள்ள லென்ஸ்க்களை பயன்படுத்தி இருப்பதால் இதனைஉணர முடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.
அதேபோன்று ஏற்கனவே அமெரிக்காவில் நோயாளி ஒருவரின் கண் இமைக்குள் 23 காண்டாக்ட் லென்ஸ்களை கண்டுபிடித்து அகற்றிய சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுவது, நீண்ட காலமாக காண்டக்ட் லென்ஸ் அணிந்திருக்கும் நபர்கள் கண் கார்னியா உணர்வு இழந்து விடும். இதனால் அவர்கள் கண்ணில் இருக்கும் பொருளை உணர இயல முடியாமல் போய்விடுகிறது. அதனால்தான் தூங்குவதற்கு முன்பு சிறிது நேரம் உறங்கினாலும் கூட காண்டாக்ட்லென்ஸ்களை கழற்றி வைக்க வேண்டும் இல்லையெனில் கண்களில் புண்கள், தொற்றுகள், கண் இமைக்குள் லென்ஸ் பதிந்து விடும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.