
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்களா என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு ஹோட்டலில் வைத்து 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண் நேற்றிரவு ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்காக சென்றிருந்தார். அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்துள்ளனர். அந்த பெண்ணை அவர்கள் அழைத்துச் சென்று ஹோட்டல் மாடியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்த பெண்ணை இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அதிகாலை 6 மணி அளவில் தான் அங்கிருந்து விடுவித்துள்ளனர். அதோடு இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த பெண்ணை மிரட்டியும் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு திரும்பிய நிலையில் தன் கணவரிடம் நடந்த விவரங்களை கூறவே இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இதுவரை மூன்று பேரை கைது செய்தள்ள நிலையில் மற்றவர்களை தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.