
உள்நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர் துபாய்க்கு வேலைக்காக சென்றுள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை ஊருக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால் 5 ஐந்து ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்லாமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரை அழைத்து வர அவரது சகோதரர் துபாய்க்கு சென்றுள்ளார். அவரது சகோதரருடன் துபாயிலிருந்து கிளம்பி விமான நிலையம் வரை வருவார் பின்பு திரும்பி விடுவார். இதையே வழக்கமாக கொண்டிருந்ததால் அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் அவருக்கு “ஏரோபோவியா” என்ற வியாதி உள்ளது தெரியவந்தது. இந்த வியாதி உலகில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அதீத பயத்தினால் ஏற்படும் நோயாகும். விமான பயணத்தின் போது பாதுகாப்பு வசதிகள் சரியாக இருந்த போதிலும் பயம் காரணமாக விமானத்தில் பறப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
இதன்பின் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் சொந்த ஊர் திரும்ப துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். விமான நிலையத்திற்கு வந்த அவர் திடீரென ஏற்பட்ட பயத்தால் அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். இதனை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் அவரை அமைதிப்படுத்தி விமானத்தில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் விமான அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.