உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஹரி பர்வத் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள சோந்த்கி மண்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி மோதியதில் துயரச்சம்பவம் நடந்துள்ளது. ஸ்கூட்டியில் பயணம் செய்த 2 சகோதரர்கள் இந்த விபத்தில் சிக்கிய நிலையில், ஒருவருக்கு பரிதாபமான முறையில் உயிரிழப்பு ஏற்பட்டது, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் எதிரே வந்த  ஒருவரும் காயமடைந்துள்ளார். இந்த விபத்து முழுவதும் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. விபத்து எப்படி நடந்தது, என்ன காரணம்  என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.