
சென்னையில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் மும்மொழிக் கொள்கையை ஏற்க கட்டாயப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது, மக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில் ஹிந்தி நமக்கு எந்த விதத்தில் பயன் தரும். ஹிந்தியை கற்றுக் கொள்வது பெரிய விஷயம் கிடையாது. நான் அசாம் மாநிலத்தில் இருந்த போது மூன்றே மாதத்தில் ஹிந்தியை கற்றுக் கொண்டேன். மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழி தெரிய வேண்டும் என்று உளரிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை இதை நம்பி நாம் மட்டும் ஏமாந்து விட்டால் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பார்கள். ஒரு பள்ளியில் படிக்கும் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழியை தேர்வு செய்தால் அத்தனை பாடத்திற்கும் எப்படி ஆசிரியர்களை நியமிக்க முடியும். உண்மையில் இது நடைமுறையில் சாத்தியமாகாது. நம்மை பிளாக் மெயில் செய்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் இனி செருப்பு போடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் இனி அவர் ஜென்மத்துக்கும் செருப்பே போட முடியாது என்று கூறினார்.