சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் sk23 படத்திலும், சுதா கொங்கரா  இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.  நேற்று சிவகார்த்திகேயன் தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களுக்கெல்லாம் நன்றி கூறி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன். முன்பை விட இன்னும் அதிகமாக உழைப்பேன்”என்று கூறியுள்ளார்