கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் அருகே சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் முகமது ஆஷீர் என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் இருந்த 7 தெரு நாய்கள் சிறுவனை கடிக்க துரத்தியது. அந்த சிறுவன் எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஓடி உயிர் பிழைத்து விட்டான்.
இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் சமீப காலமாக நாட்டில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படும் நிலையில் நாய்களால் கடிப்பதால் உயிரிழக்கும் சம்பவங்கள் கூட நடக்கிறது. மேலும் இந்த நிலையில் ஒரு சிறுவனை நாய்கள் கடிக்க துரத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
