
சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளில் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழாவாகும். இந்த விழாவின்போது கோயில்களுக்கு செல்வது, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று உரைகளில் பண டோக்கன்களை வாங்குவது, பரம்பரியமான உணவுகளை உண்ணுதல் போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன. இந்த பண்டிகையின் போது கிடைக்கும் பணத்தை குழந்தைகள் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்துவர்.
இந்த நிலையில் சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தை சேர்ந்த சிறுவன் காவல்துறைக்கு போன் செய்து, தனக்கு சந்திர புத்தாண்டின் போது கிடைத்த பணத்தை தனது தந்தை திருடிவிட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிறுவனின் வீட்டிற்கு காவல் துறையினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் சிறுவன் சரியாக படிக்க வில்லை என்பதால் அவனை அவரது தந்தை கண்டித்து உள்ளார்.
இதனால் கோபத்தில் சிறுவன் தனது தந்தை பணத்தை திருடியதாக கூறி காவல்துறையில் சிக்க வைக்க முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் சிறுவனிடம் உன்னுடைய பணத்தை தந்தை மிகவும் பத்திரமாக வைத்திருப்பார். உனக்கு தேவைப்படும் போது அதற்கான செலவுகளுக்கு அவர் கொடுப்பார் என அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளனர்.