தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக ரேவந்த் ரெட்டி இருக்கிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குஜராத்தில் காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. குஜராத்தின் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு வரை மோடியின் ஜாதி உயரிய ஜாதியாக தான் இருந்தது. அதன் பிறகு தான் மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். உண்மையில் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் கிடையாது. அவர் சட்டபூர்வமாக தன்னை  பிற்படுத்தப்பட்ட (BC) வகுப்பைச் சேர்ந்தவராக மாற்றிக் கொண்டார்.

அவருடைய சான்றிதழில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர் உண்மையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான மனநிலையை கொண்டவர். உண்மையாகவே பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு எதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையை ஏன் கண்டறிய முயற்சி செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தியின் மதம் குறித்து கேட்டு பாஜகவினர் கண்டனம்  தெரிவித்து வருகிறார்கள்.