கடந்த சில நாட்களாகவே தவெக கட்சி மீது தடி பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகவே பேசப்பட்டு வருகிறது. அவர் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து அவ்வாறு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள தாடி பாலாஜி, “இரண்டு மூன்று நாட்களாகவே அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் வைரலாக ஒரு விஷயம் பரவிக் கொண்டிருக்கிறது.
யாரோ ஒருத்தர் எனக்கு அனுப்பிவைத்தார். நான் அதை எதார்த்தமாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தேன். அது இப்படி ஒரு விவாத பொருள் ஆகும் என்று எனக்கு தெரியாது. இன்னொரு விஷயம் என்னுடைய நண்பரும் தவெக தலைவருமான மரியாதைக்குரிய விஜய் சார் கட்சி ஆரம்பிக்கும் பொழுது என்ன சொன்னேனோ அது தான் இப்போதும் சொல்வேன்.
எனக்கு ஒரு நண்பராக அவரை லவ் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அவர் கட்சி நல்லபடியாக வரவேண்டும். பதவி அல்லது அங்கீகாரம் கிடைக்கும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க மனதார நன்றி கடனுக்காக தான் எல்லாமே. இது யாருக்கு புரியும் என்று தெரியாது. என்னுடைய தலைவருக்கு புரியும் கடவுளுக்கு புரியும்.
அவர் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். தம்பி ஒரு விஷயம் நாங்க எல்லாம் நெஞ்சில் குத்துவோம் முதுகுல குத்துற ஆள் கிடையாது. அதேபோன்று இன்னொருத்தர் சொல்கிறார் பச்சை குத்தினால் பதவி கொடுத்து விடுவார்களா இது முட்டாள்தனமாக இருக்கிறது என்றும் சொன்னார்.
அவருக்கு நான் போன் பண்ணி சொன்னேன் சார் பச்சை குத்தினா பதவி வருமா? நான் அவர்கிட்ட கேட்டனா? ஒரு விஷயம் சொல்லுறேன் ஒருத்தரைப் பற்றி என்னவென்று தெரியாமல் தான் பேசுகிறீர்கள். இது முதலில் தவறு. என்னைப் பற்றி உங்களுக்கு என்ன முழுமையாக தெரியும். பேசின அத்தனை பேருக்கும் என்னை பற்றி தெரியாது.
யாரையும் நான் ஒருமையில் பேசவே இல்லை. அதேபோலத்தான் என்னுடைய தலைவரும் நண்பருமான TVK தலைவர் விஜய்யம் யரையும் ஒருமையில் பேசியதே கிடையாது. வார்த்தைகளில் ரொம்ப கவனமாக இருப்பார்” என்று பேசியுள்ளார்.
