இயக்குனர் அட்லி இயக்கி வெளியான “ஜாவான்” திரைப்படம் சமீபத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் அட்லி, அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க  உள்ளதாகவும் பல நூறு கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகப் போகிறது எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அனிருத் அல்லது ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் தான் இசையமைக்க உள்ளதாக  தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இளம் சென்சேஷன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே சாய் அபயங்கர் பென்ஸ், சூர்யா 45 ஆகிய படங்களில் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.