
டெல்லியில் சட்டசபை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அதன் பின் அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே போட்டியிட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் தோல்வி அடைந்தது.
இது தொடர்பாக காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை குறித்து கேலி செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டை போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பிரபலமான மீம்மை ஷேர் செய்துள்ளார். அதில் உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.