டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக உருவான ஆம் ஆத்மி இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் 22 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. ஆனால் கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோரும் தோல்வியை சந்தித்தது அந்த கட்சிக்கு பெரும் அடியாக அமைந்தது. இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றதால் தற்போது முதல்வர் அதிஷி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.