திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மத்திய அரசு பட்ஜெட்டில் திமுகவிற்கு வஞ்சகம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் தொடர்ந்து பேசும்போது, தமிழ்நாடு மத்திய அரசுக்கு அதிக வரி பகிர்வை கொடுக்கும் மாநிலமாக இருந்த போதிலும் பட்ஜெட்டில் மட்டும் வஞ்சனை செய்வது ஏன்.? எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொருள் ஈட்டி தருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்ததை அனைவருக்கும் தெரியப்படுத்த தான் போராட்டம் நடத்தினோம். நானும் தமிழச்சி என்று கூறும் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்காக என்ன செய்துள்ளார்.

இது பற்றி கேட்டால் அவர் கோபப்படுவதோடு எதிர்க்கட்சி எம்பிகளின் கேள்விக்கு அவரால் பதில் சொல்லவும் முடியவில்லை. டெல்லியில் உள்ள அனைவரும் இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் தான் பாஜகவை வெல்ல முடியும் என்று கூறினார். மேலும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ்இணைந்து போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைத்திருக்கும் என்று பலரும் கூறிய நிலையில் அவர்கள் இருவரும் தனித்தனியாக போட்டியிட்டது தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கூறிவரும் நிலையில் தற்போது ஆர் எஸ் பாரதியும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.