தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் நிலையில் அடுத்ததாக 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் கூட தமிழக மின்சாரத்துறை பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மின்தடை இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகும் தேதியை தற்போது அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 17ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியாகிறது. இதனை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் http://www.dge.tn.gov.in/என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.