
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது, கடந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆந்திரா, ஆந்திரா என்று சொன்னார்கள். அதேபோன்று இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் பீகார், பீகார் என்று கூறுகிறார்கள். ஆந்திராவிற்கோ, பீகாரக்கோ திட்டங்களை ஒதுக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை.
தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம். அனைவரையும் ஏமாற்றும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்திருந்தால், தமிழகம் இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். மதவாத அரசியல் செய்யும் பாஜக, ஓட்டு அறுவடைக்காக மக்களை ஏமாற்றுகிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.