
புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வஞ்சிதா பாண்டேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இவர் வருண்குமார் ஐபிஎஸ் அவர்களின் மனைவி ஆவார். இந்நிலையில் தற்போது வந்திதா பாண்டேவை மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 5 வருடங்கள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை அவர் மத்திய அரசு பணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய கணவர் வருண்குமார் ஐபிஎஸ் திருச்சி டிஐஜியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.