
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் என்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சியினர் பட்ஜெட் குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்க திட்டங்கள் ஏதும் இல்லை. சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.