
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் பின்னர் நடிகர் ஆனார். இதைத்தொடர்ந்து திமுகவில் இணைந்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கு வந்த நிலையில் அவருக்கு அடுத்தபடியாக உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். இதனால் திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று எதிர் கட்சிகள் சரமாறியாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக கொடுத்த ஒரு பழைய பேட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு பேட்டியில் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு தான் வர வேண்டும் என்று கிடையாது. கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் போது அவர்கள் தான் வரவேண்டும் என்று கூறுகிறார். அதன் பிறகு அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பிறகு அமைச்சர் பதவி தான் அடுத்து உங்களுக்கு கிடைக்கும் என்று பேட்டியில் ஒருவர் கேட்க அதற்கு உதயநிதி ஸ்டாலின் எனக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களுக்கு தான் அந்த பதவி கொடுக்க வேண்டும். மேலும் கண்டிப்பாக தலைவரும் அவர்களுக்கு தான் அந்த பதவிகளை கொடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதோடு தற்போது துணை முதல்வராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram