
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் டவுண்ட் டெஸில் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அந்த பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு சிறுவன் ரிப்போர்ட் கார்டில் தன் பெற்றோர் கையெழுத்தை போட்டுள்ளான். இதனை உடன் படிக்கும் ஒரு மாணவி பார்த்த நிலையில் ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனால் அந்த மாணவன் கோபத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யுமாறு கூறியுள்ளார். இதற்காக அந்த மாணவனுக்கு 100 ரூபாய் பணமும் கொடுத்துள்ளான்.
ஆனால் அந்த மூத்த மாணவன் சிறுவனின் திட்டத்தை பள்ளி நிர்வாகத்திடம் கூறிய நிலையில் சிறுமியின் பெற்றோரும் பலமுறை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமையின் பெற்றோர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புகார் கொடுத்த நிலையில் அவர்கள் மிகவும் தாமதமாக கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலைக்கு திட்டம் தீட்டிய சிறுவனுக்கு 12 வயது ஆகாததால் அவன் இது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.