ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த டெஸ்ட், ஒரு நாள், டி20 அணிகளையும் சிறந்த வீரர், வீரர்களையும் தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பது வழக்கம். குறிப்பிட்ட அந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கு மூன்று பேர் பரிசிலிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய அணியின் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஜோரூட், ஹாரி ப்ரூக். இதில் இந்திய அணியை சேர்ந்த பும்ரா இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2024 ஆம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாகத்தான் ஐசிசி இவரை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று தேர்ந்தெடுத்துள்ளது.