
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றிய காரணத்திற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை சோபனாவுக்கு பத்மபூஷன் விருதும், இந்திய வாக்கி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீதேஜ்க்கு பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் 7 பேர் பத்மவிபூஷன் விருதுகளையும், 19 பேர் பத்ம பூஷன் விருதுகளையும், 113 பேர் பத்மஸ்ரீ விருதுகளையும் பெறுகிறார்கள். அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசாத் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவாயூர் துரை, தாமோதரன் சீனிவாசன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், தேவ சேனாதிபதி, சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மொத்தம் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.