
மெக்சிகோ நாட்டில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. மெக்சிகோவின் கிழக்கு எல்லையில் மெக்சிகோ குடா அமைந்துள்ளது. மேலும் மெக்சிகோ நகரில் கடற்கரை பகுதிகள், நகரங்கள், கிராமங்கள் என சிறந்த கலாச்சாரம் மிகுந்த இடங்கள் மற்றும் சுவையான உணவு, அழகான இயற்கை சூழல் ஆகியன பலரும் சுற்றிப் பார்க்கும் சிறந்த இடமாக உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவில் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் மெக்சிகோ சுற்றுலா தளங்களின் பெயர்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அதாவது “அமெரிக்காவின் நீர் நிலைகள் அழிக்க முடியாத பகுதிகள் அவை எண்ணெய் உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு மிக முக்கியமான இடம்” என்றும் தெரிவித்துள்ளார். மெக்சிகோ மக்களின் சுற்றுலாத்தளம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரத்தியேகமான இடத்தின் பெயரை மறுபெயரிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். “மெக்சிகோவின் வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாகவும், அலாஸ்காவை டேனாலியை மவுண்ட் மெக்கின்லி” என்று மறுபெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு மெக்சிகோ மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில்”பூர்வீக மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை மாற்றி பூர்வீக வரலாறு அழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் ஆரம்ப கால நிர்வாக நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருந்த இந்த மாற்றங்கள் அமெரிக்க பாரம்பரியத்தை மீட்டெடுப்பதாக கூறிய தேர்தல் பிரச்சார உறுதியை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கைக்கு மெக்சிகோ கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.