
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரகாஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தனர் ஆனால் ஒரு சில காரணங்களால் அவரது திருமணம் தள்ளிக் கொண்டே போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அச்சத்தில் தனது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக பிரகாஷின் வீட்டிற்கு சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.