
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி எடுத்தார். அப்போது கோமியம் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது, பைத்தியங்களிடம் நாடு சிக்கிவிட்டது. மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி. மாட்டு கறி சாப்பிடுகிறவன் கீழ் ஜாதி.
மாட்டு கோமியம் குடிப்பவன் உயர் சாதி இதுதான். இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது. பால் கொட்டப்படுகிறது. மூத்திரம் குடிக்கப்படுகிறது. இந்த நாட்டில் நீயும் நானும் சிக்கிக்கொண்டோம் என பேசி உள்ளார்.