
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெரியார் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, உனக்கு பாலியல் இச்சை வரும்போது அக்காவோ இல்ல தங்கையோ, தாயோ இல்ல மகளோ யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள் என்று கூறியவர் பெரியார். மதுவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்த நிலையில் அவர் தோட்டத்தில் இருந்த ஆயிரம் தென்னை மரங்களை வெட்டினார். ஒரு பகுத்தறிவாளர் இப்படி செய்வாரா. என் தோப்பில் கள் எடுக்க அனுமதி கிடையாது என்று சொன்னால் முடிந்து விடும். அதை விட்டுவிட்டு எவனாவது தென்னை மரத்தை வெட்டுவானா.? கள் எடுக்க அனுமதி கிடையாது என்று அறிவுள்ளவன் கூறுவான்.
அதை விட்டுவிட்டு தென்னை மரத்தை வெட்டுவது ஒரு பகுத்தறிவாளன் செய்யும் விஷயமா. எந்த நாட்டில் மது இல்லை. உலகில் யார் தான் மது குடிக்காமல் இருக்கிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்று சொல்வது கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று கூறியுள்ளார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம். மேலும் பெற்ற தாய், மகளுடன் பாலியல் இச்சை வரும் போது உடலுறவு கொள் என்று பெரியார் சொன்னது மது குடிக்காதன்னு சொல்றதும் கட்டிய மனைவியுடன் படுக்காதன்னு சொல்றதும் சமம் என்று சொன்னது பெரியார் என்றும் இதுதான் பெரியார் பேசும் பெண்ணுரிமை என்றும் பேசியுள்ளார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.