திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. அதாவது போராட்டங்களுக்கு திமுக கட்சி அனுமதி மறுப்பதாக முன்னாள் செயலாளர். கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டிய நிலையில் புதிதாக பொறுப்பேற்ற சண்முகம் திமுகவின் வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்று அதிரடியாக கூறினார்.

இதனால் மோதல் போக்கு நிலவியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு கொடுப்பதாக சண்முகம் அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது திமுக கூட்டணியில் யார் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றாலும் அவர்களுக்கு சிபிஎம் கட்சி முழு ஆதரவு கொடுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் நலம் சார்ந்து சமரசமற்ற போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருவதாகவும், இந்தப் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.