தமிழக சட்டசபையில் நேற்று ஆண்டின் முதல் நாள் கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஆளுநர் ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக கருதி தமிழக அரசின் உரையை படிக்காமல் வெளியேறிவிட்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதில் சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் போராட்டத்தில் திமுக கட்சி அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஒன்றிய அரசின் ஏஜெண்டுகள் போன்று தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதாகவும், தமிழ் தாய் வாழ்த்தையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து அவர் அவமதிப்பதாகவும் திமுகவினர் கண்டனங்களை தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.