சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டின் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பாரதிதாசன் பாடலையும் பாடி இருக்கலாம். எப்படி இருந்தாலும் தமிழ் தாய் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.