ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வந்தது. இந்த தொடரை தற்போது ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. சிட்னி நகரில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களிலும் ஆல் அவுட் ஆனது.
இன்று காலை இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 157 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசிய நிலையிலும் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
