
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் தனது மனைவி அதிகமாக பேசுவது பிடிக்காததால் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த பெண் ஒரு வார்த்தை கூட பேசாமல் கணவரின் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என கணவரின் குடும்பத்தினர் விரும்புவதாக கூறப்படுகிறது.