சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூரில் வசித்து வந்தவர் முகேஷ் சந்திரசேகர். இவர் யூடூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முகேஷ் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் முகேஷை தேடிவந்துள்ளனர். அப்போது ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் முகேஷ் பிணமாக கிடந்துள்ளார்.

செப்டிக் டேங்கில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முகேஷ் இன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பலரும் ஒப்பந்ததாரரின் முறைகேடுகளை வெளியிட்டதால் முகேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் கூறிவந்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, முகேஷ் அவரது உறவினர்கள் இருவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.