
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல் முருகேஸ்வரியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். எப்படியோ போராடி முருகேஸ்வரியை பரத் காப்பாற்றி விட்டார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அதிக நீரில் இருந்ததால் மூச்சு திணறி பரத் உயிரிழந்தார். முருகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பரத்தின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.