
டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் சேவிங் செய்ய பயன்படும் சேவிங் ரேசரை இரண்டு பாகங்களாக விழுங்கி விட்டார்.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த ரேசர் பிளேடு மற்றும் Handle-ஐ பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர். இந்த சிகிச்சைக்கு பிறகு அவரை மன அழுத்தத்தில் இருந்து நீக்க கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.