
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொத்தம் 3 போட்டிகள் முடிந்த நிலையில், 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றது. 3வது போட்டியில் மேட்ச் டிரா ஆனது. இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்க போகும் 4வது போட்டி நடந்து வரும் நிலையில், 19 வயதான ஆஸ்திரேலியா வீரர் சாம் கான்ஸ்டாஸ் என்பவர் பும்ராவிற்கு எதிராக அபார ஆட்டத்தை தொடங்கினார். இந்த போட்டியில் அவர் 60 ரன்கள் எடுத்தார்.
இதற்கிடையில் இவருக்கும், கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கான்ஸ்டாஸ் தோளில் கோலி மோதினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த நடுவர் மற்றும் கவாஜா இருவரையும் சமாதானப்படுத்தினர். அந்த இளம் வீரருக்கு எதிராக ஹோலி செய்த செயல் ஆஸ்திரேலியா ஊடகங்களில் பெரும் எதிர்ப்பை தெரிவித்தது. அதோடு அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
முன்னதாக இளம் வீரரான கான்ஸ்டாஸ் யு19 உலக கோப்பையின் போது பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தன்னுடைய விருப்பமான வீரராக கான்ஸ்டாஸ், விராட் கோலி கூறியிருந்தார். அதாவது விருப்பமான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பட்டியலில் முதலில் 2 கிரிக்கெட் வீரர்களின் பெயரை குறிப்பிட்டு இதில் யாரு உங்களுக்கு விருப்பமான வீரர் என்று கேள்வி எழுப்பும் போது, கான்ஸ்டன்ட் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அதன் பின் அவர் தேர்ந்தெடுத்த வீரர் மற்றும் இன்னொரு வீரரை வைத்து கேட்கும் போது அதில் ஒரு வீரரை தேர்ந்தெடுக்கிறார். இப்படியாக இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் அல்லது விராட் கோலி என்று கேட்டதற்கு விராட் கோலியை தேர்ந்தெடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், தட்டிக் கொடுக்க வேண்டிய நீங்களே இப்படி செஞ்சிட்டீங்களே என விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.