
அரியானா மாநிலத்தில் உள்ள பரீதாபாத் நகரில் 11-ம் வகுப்பு படிக்கும் அன்ஷூல் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது ரோஹித் தமா மற்றும் ஹிமான் ஷூ மாத்தூர் ஆகியோர் தங்களுடைய கூட்டாளிகளுடன் சென்றுள்ளனர். இவர்கள் சிறுவனை கடுமையான ஆயுதங்களால் தாக்கினர்.
இதை பார்த்த சிறுவனின் சகோதரி மற்றும் உறவினர்கள் அவர்களிடம் இருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டான். அதாவது அவர்கள் சிறுவனை 14 முறை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் தான் அந்த சிறுவன் இறந்து விட்டான். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கூறும் போது அந்த கும்பலிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிரட்டல் வந்ததாகவும் ஆனால் அதைப்பற்றி போலீசாரிடம் கூறிய போது அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது பற்றி உயிரிழந்த சிறுவனின் நண்பர் அன்மோல் கூறும் போது, சிறுவனை கொலை செய்த கும்பல் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள். அவர்கள் அந்த பகுதியில் போதைப்பொருட்களை விற்பனை செய்ததோடு பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிறுவன் அவர்களை தட்டி கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சிறுவனை பழி வாங்குவதற்காக அவர்கள் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.