அரியலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் கூண்டோடு கட்சியிலிருந்து விலகினர். தா. பலூர் ஒன்றியம் காரைக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஜெயபால் என்பவர் மகளிர் அணி நிர்வாகியாக வேலை பார்த்தார். இவர் பெண்களுக்கு மதிப்பு இல்லை எனக் கூறி தமிழக வெற்றி கழக கட்சி கொடியை கம்பத்தில் இருந்து இறக்கினார். மேலும் காரில் கட்டிய கொடி ஆகியவற்றையும் அகற்றினார். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என விஜய் கூறியதால் தான் சேர்ந்தோம் பாடுபட்டு கட்சிப் பணிகளை செய்தோம் ஆனால் பெண்களுக்கு மரியாதை இல்லை.

எங்கள் பணிகளை வெளியிலேயே தெரிய விடுவதில்லை. நாங்கள் கட்சியிலிருந்து விலகுகிறோம் என பிரியதர்ஷினி கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அந்த பெண்ணை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர். பிரியதர்ஷினி கோபால் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதனால் பிரியதர்ஷினி தமிழக வெற்றி கழகத்தில் தொடர்ந்து செயல்படுவதாக கூறினார்.

அவர் பேசும்போது நேற்று சில முரண்பாடுகளால் தமிழக வெற்றி கழக கொடியை இறக்கினோம். இன்று நாங்களே கொடியேற்றி விட்டோம். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என கூறியதால் அரியலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் கொடியை ஏற்றி இருக்கிறோம். நான் கட்சியை விட்டு வெளியே போவதாக சொல்லவில்லை. எனது விருப்பத்தோடு தான் கட்சிக்கு வந்தேன். இப்போதும் என் விருப்பத்தோடு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறேன். தொடர்ந்து பணியாற்றுவேன் என பிரியதர்ஷினி கூறியுள்ளார்.