தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சி சந்தியா தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் ஸ்ரீதேஜ் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு  ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் அவர்தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதன்பிறகு ரசிகை உயிரிழந்தது தெரிந்தும் அவர் ரோடு ஷோ நடத்தினார் என்றும் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இதனை அல்லு அர்ஜுன் மறுத்தத்தோடு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக இது போன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது என்றார். இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகை உயிரிழந்தது தெரிந்தும் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்ததாக காவல்துறையினர் கூறியதோடு அதற்கான ஆதாரமாக சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதாவது இரவு 9:45 மணிக்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த விஷயத்தை இரவு 10:45 மணிக்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் தெரிவிக்க  அவரை பார்க்க சென்ற போது திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் அவருடைய பாதுகாவலர்கள் அவரை பார்ப்பதற்கு சிக்கட பள்ளி உதவி காவல் ஆணையருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவருடைய மேலாளர் மூலம் விஷயம் அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் திரையரங்கை விட்டு செல்ல மறுத்ததால் ஒரு வழியாக காவல் துறையினர் உள்ளே நுழைந்து விவரத்தை அல்லு அர்ஜுனிடம் கூறினர்.

ஆனால் அப்போதும் படம் முடிந்த பிறகு செல்வதாக அவர் பிடிவாதமாக கூறிவிட்டார். இதன் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு வலுக்கட்டாயமாக அவரை தியேட்டரில் இருந்து வெளியேற்றினோம் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் தியேட்டரில் இருந்தபோது ரசிகை உயிரிழந்த நிலையிலும் ‌ வெளியேற மறுத்தது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில் உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி பூந்தொட்டிகளை உடைத்து தாக்குதல் நடத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரசிகை உயிரிழந்த விவகாரம் மாணவர்கள் அமைப்பு போராட்டமாக மாறியுள்ளது. அவர்கள் உயிரிழந்த ரசிகை குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ரேவதி குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டு வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இது சம்பவத்திற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் திரையுலக பிரபலங்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சட்டம் ஒழுங்கை காவல் துறை நிலைநாட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.