
திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.50 லட்சம் வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. 2019- ல் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 2024- ல் 34 தொகுதிகளில் போட்டியிட்டது. 14 தொகுதிகளில் கூடுதலாக போட்டியிட்ட அதிமுகவின் வாக்கு ஒரு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சதவீத கணக்கு ஒன்றை சொல்கிறார்.
காத்துல கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும் பழனிச்சாமி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என நம்பி பொய் கணக்கை அவிழ்த்து விட்டிருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.