திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குலவணிகபுரம் ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீஸ்காரர் சார்லஸ் கால் மீது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் சக்கரம் ஏறியதாக தெரிகிறது. இதனால் போலீசார் வாலிபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபரை போலீஸ்காரர் தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் சார்லஸை போக்குவரத்து பிரிவிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.