
“Whatsapp” தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்குரிய சந்தேகத்திற்குரிய கேள்விகளை எளிமையான முறையில் கேட்கவும் அதற்கான சரியான பதிலை பெறவும் புதிய AI முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனம் இந்த புது வகையான AI முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
whatsapp அப்ளிகேஷன்களில் மெட்டா AI பயன்படுத்தும் முறை பின்வருமாறு,
1. whatsapp அப்ளிகேஷனில் சாட் மெனுவில் மெட்டா AI என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு மெட்டா AI அதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை கொண்ட ஒப்புதல் கேட்கும் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
2. பின்பு மெட்டாAI யில் பயனர்கள் தங்கள் நண்பர்களிடம் மெசேஜ் செய்வதை போன்று இதிலும் மெசேஜ்களை அனுப்ப ஆரம்பிக்கலாம். அதனைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மெட்டா AI பதிலளிக்கும்.
மெட்டாAI அனைத்து தலைப்புகளுக்கும் முறையான பதில்கள் விரிவாக கொண்டுள்ளதால் தங்களுக்கு எளிமையான முறையில் பதில் கிடைக்கும்.
3. மெட்டாAI பல்வேறு வகையான தகவல்களைப் பெற முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்படங்கள், புத்தகங்கள், அருகில் உள்ள சுற்றுலா தளங்கள், ஹோட்டல்கள் குறித்த தகவல்களையும் மிக எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.
4. பயனர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் இந்த மெட்டாAI யுடன் விவாதிக்கலாம்.
குரூப்பில் மெட்டா AI பயன்படுத்தும் போது”@meta AI” என்று சேர்க்கப்பட்ட மெசேஜ்களை மட்டுமே AIயால் படிக்க முடியும். தங்கள் நண்பர்களுடன் விவாதிக்கும் மெசேஜ்களை அதனால் புரிந்து கொள்ள முடியாது.