வேலூர் மாவட்டத்தில் உள்ள நாவிதம்பட்டி கிராமத்தில் அஷ்மிதா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அஷ்மிதா வாணியம்பாடியில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அஷ்மிதாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் அஷ்மிதா தனது அறைக்கு சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தற்போது தங்களது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அஷ்மிதா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.