
இந்திய தெற்கு ரயில்வே துறை அமெரிக்க நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி ஒப்பந்தம் வழங்கியுள்ள சம்பவம் ஆதாரங்களுடன் வெளியானது. இதில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மூக் இங்க் என்ற நிறுவனத்திடம் ரூபாய் 4.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளது. 2020இல் மூக் இங்க் நிறுவனம் மத்திய ரயில்வேக்கு மோஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ற கருவியை விற்பனை செய்வதற்காக ஒப்பந்தம் கோரியது. 2020க்கு முன்பு வரை ஒப்பந்த பட்டியலில் இந்த நிறுவனம் இடம் பெறாத நிலையில், இடைத்தரகர்கள் மூலம் 10% கமிஷன் தருவதாக கூறி ஒப்பந்தத்தை கடந்து 2020 மூக் இங்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் நவம்பர் 2021 இல் HAL(ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நிறுவனத்திடமும் ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தையும் கைப்பற்றியது. இது குறித்து அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்தது குறித்து மூக் இங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டது. எனவே இந்த நிறுவனத்திற்கு ரூபாய் 14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அபராத தொகையை மூக் இங்க் 3 மடங்காக செலுத்தியுள்ளது.
இதேபோன்று ஆரக்கல் நிறுவனமும் இந்தியா, யுஏஇ, துருக்கி ஆகிய நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்ற விவகாரத்தில் அதற்கும் ரூபாய் 193 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே அதானே லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்ற தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டு உள்ள நிலையில் தற்பொழுது இந்தியாவின் பிற பொதுத்துறை நிறுவனங்களும் அமெரிக்காவிடம் லஞ்சம் பெற்று உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.