
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அன்கீத் ராஜ்புத். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளிலும் விளையாடி உள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.
வேகப்பந்துவீச்சாளரான இவர் 29 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்காததால் இவர் விரக்தியில் இருந்துள்ளார். இதன் காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.