தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அதிக அவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது பொருட்கள் இருப்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் கிடைக்காமல் கஷ்டப்படும் போது பொருட்களை இருப்பு வைத்திருப்பது மிகவும் தவறு. இதுவரை ரேஷன் கடைகளில் பொருட்களை இருப்பு வைத்திருந்தால் 1 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை போன்றவைகளுக்கு 25 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் இனிமேல் அபராத தொகை 75 ஆக உயர்த்தப்படும். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்களை இருப்பு வைத்திருந்தால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் எனவும் இதுபோன்று நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.