தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விடுதலை 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில், வெற்றிமாறன் இயக்கியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நடிகர் சூரி நடிப்பில் கொட்டு காளி மற்றும் கருடன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது சூரி மாமன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விலங்கு என்ற புகழ்பெற்ற வெப்சீரிசை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர். மேலும் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.