சென்னை மயிலாப்பூரில் உள்ள பறக்கும் ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து நேற்று முன்தினம் லூயிஸ் மத்தியாஸ் என்பவர் கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் கடந்த 10 வருடங்களாக சாலைகளிலும் கோவில் வாசல்களிலும் தங்கி வந்துள்ளார். இவர் சிறிய வேலைகள் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடித்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் தற்போது சேட்டு என்ற 60 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் அவர் என்னுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவரை கீழே தள்ளிவிட்டு விட்டேன். நான் எதற்காக அவரை கீழே தள்ளி கொலை செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதாவது லூயிஸ் அவரை அசிங்கமாக பேசியதால் மதுபோதையில் ஆத்திரத்தில் கீழே தள்ளிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் மற்றபடி அவர் யார் என்பதை தனக்கு தெரியாது என்று அவர் கூறிய நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்