தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜனவரி வரையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியுள்ளார். இதுவரையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் இருக்கும் நிலையில், இதுவரையில் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி 180 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுவரை டெங்குவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறிய அவர் பொதுமக்கள் வீடுகளை சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொசுவை ஒழிக்கும் பணிகளை அரசு மேற்கொண்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதோடு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால்தான் கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதுவரை டெங்குவால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.