தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கரூர், திருவள்ளூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர்  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று நாகூர் தர்கா விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலியில் இன்று தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.